திருக்குறள் இயற்ற பட்ட இடம் |
2000 வருஷம் தொன்மை உடைய மதுரைய பத்தின என்னோட கோபம் இது .மதுரைய பத்தி ஆர்வம் இல்லாதவங்க ;சினிமாக்கரங்களும் ,அரசியல்வாதிகளும் மதுரைய சபிக்கர மாதிரி skip பண்ணிடுங்க ..
செமஸ்டர் பரிட்சைன்னு இல்லாத முளைய test பண்ணி முடிச்ச சாய்ந்தரமே ,என் உயிர் நண்பன் என் உயிரை எடுபதர்காக தகராறு பண்ணி தகராறுக்கு குட்டிட்டு போனான் பகல் கொள்ளையா 120 ரூபாய் போனது தான் மிச்சம்.இந்த போஸ்டர் பார்த்து ஏமாந்து தாங்க நானும் போனேன், பயபுள்ள இவ்ளோ பயபக்திய போஸ் கொடுத்திருக்கானே, நம்ம தமிழ் சினிமாலே மதுரையே இப்புடிஎல்லாம் கூட காட்டுவாங்க போலிருக்க்னு நம்பி உள்ள போய் உட்கார்ந்தேன். ஆனா எல்லாம் ஒரே குட்டைலே ஊருன மட்டைக தான் ரொம்ப சீக்கிரமே புரிஞ்சுருச்சு.
தகராறு படத்த பார்த்து நேரத்தையும் பணத்தையும் (மருத்துவ செலவு உட்பட ) வீணடித்து ,அருள்நிதி புண்ணியத்துல தலை வலி பெற்றதால review பண்ண விரும்பல.
ஆனா ஒன்னு இந்த படம் பார்த்ததுக்கு அப்புறம் வேலாயுதம் சந்தானம் மாதிரி இல்லாத மனசாட்சி கலர் கலரா தோன்றி செறுப்பால அடிச்சுது .
(இப்புடி தான் எனக்கும் என் friend க்கும் இருந்துச்சு படம் பார்த்து theatre லே இருந்து வந்தபோது )
தகராறு படத்த பார்த்து நேரத்தையும் பணத்தையும் (மருத்துவ செலவு உட்பட ) வீணடித்து ,அருள்நிதி புண்ணியத்துல தலை வலி பெற்றதால review பண்ண விரும்பல.
என் எதிரிக்கு கூட(நமக்கு அப்படி யாரும் இல்லையே) இந்த நிலைமை வரக்கூடாது
ஆனா ஒன்னு இந்த படம் பார்த்ததுக்கு அப்புறம் வேலாயுதம் சந்தானம் மாதிரி இல்லாத மனசாட்சி கலர் கலரா தோன்றி செறுப்பால அடிச்சுது .
இப்போ நாம மதுரைலே இருக்குறத சொல்லபடுற சில அமானுஷ்ய சக்திகள் பத்தி பாப்போம் வாங்க ,
1.சினிமாவில் காட்டப்படும் மதுரை :
நம்ம ஊர்லே director எல்லார்க்கும் மதுரை அப்படினா ஒரு விதமா ஓபன் பண்ணுவாங்க பாருங்க
"அய்யோ, அப்போ அவங்க அவங்களுக்குள்ள இருக்குற steven spielberg கண்டு பிடிச்சு வெளிய கொண்டு வருவாங்க பாருங்க அதை தாங்க முடியாது "
ஓபன் பண்ணா நம்ம ஹீரோ ஒரு அலுக்கு லுங்கி லே வருவார் அவர் கூட சம்பந்தமே இல்லமே friends ன்னு ஒரு நாலு பேர் இருப்பாங்க அவங்க மதுரை பாஷைன்னு ஒன்னு பேசுவாங்க நீங்க அப்படியே அத நம்பிரனும்.
நம்ம producer எல்லாம் ஏன் மதுரையே choose பண்ணறாங்கன்னு இப்போ தான் புரியுது, dress செலவு கொறையும் பாருங்க
நான் சொன்னத நம்ப மாட்டீங்களா இப்போ பாருங்க நான் காட்டுறேன்
பார்த்தீங்களா நான் சொன்னமாதிரியே இருக்கா இது trailer தான் main picture நீங்களே பார்த்திருப்பீங்க. இது போக இத விட நெறைய அற்புத காவியங்கள் இருக்கு உதாரணத்துக்கு தூங்காநகரம் , மாயாண்டி குடும்பத்தார் etc .
நம்ம ஊர்லே படம் எடுக்குற cameraman எல்லார்கிட்டயும் பெரிய camera இல்ல போலிருக்கு, பசங்க வெறும் ரெண்டு floor க்கு மேல காட்டவே மாட்டேங்குராங்க, கேட்ட மதுரையோட அழகு காடுரோம்னு சொல்லிக்க வேண்டியது. ஆனா உண்மையிலே நம்ம மதுரை லே பெரிய பில்டிங் இல்லைன்னு நெனைசுக்குரங்க வெளியூர் காரங்க, இதுல கொடுமை என்னனா இப்படி காட்டுற சினிமா காரங்க எல்லாம் 5 ஸ்டார் ஹோட்டல் தான் தங்குவாங்க.
(source போட்டால் மட்டுமே நம்பும் நண்பர்களுக்கு )
இப்படி பல mall கல் இருக்கும் போதும் என் தன் இப்படி காட்டுறாங்களோ இந்த நிலைமை மாறனும்.
இதுல மதுரை பத்தின படம் மதுரையே சுத்தி நடக்குதுன்னு சொல்வாங்க , ஆனா ஷூட்டிங் மதுரைக்கு ரொம்ப பக்கதுல நடக்கும், இன்னும் ரியல் எஸ்டேட் ப்ரோமொடேர்ஸ் பாஷை லே சொல்லனும்ன
" மதுரைக்கு மிக ஆறுகமையில் சும்மா ஒரு 1000 km தான் நம்ம ஹைதராபாத் லே நடக்கும் "
இதற்க்கு நல்ல உதாரணம் நம்ம தளபதி படம் ஜில்லா படம் மதுரை சுத்தியே நடக்குமாம், ஆனா ஷூட்டிங் ஹைதராபாத் லே தான் நடக்கும்.
இதையெல்லாம் கூட அட்ஜஸ்ட் பண்ணி படம் பார்த்தீங்க அப்படின்னு சொன்னிங்கனா மதுரை slang அப்படின்னு சொல்லி நம்ம காது கிழியுற வரைக்கும் கத்தி தொலைவங்க அத கேக்கமுடியாது .
"தமிழ் சினிமா director மற்றும் writers க்கு ஒரு சின்ன செய்தி இல்ல வேண்டுகோள் தயவு செஞ்சு இனிமேல் மதுரை slang ன்னு சொல்லி எதாவுது எழுதி உசுர வாங்கதீங்க....!"
2. ரௌடிகள் பிடியில் மதுரை
எல்லா படத்துலயும் மதுரைன்னா பொண்ணுங்கள பிடிச்சு கலாயிக்குரா மாதிரி காட்டுவாங்க, ஆனா உண்மை என்ன வென்று மதுரை மாணவர்கள் மற்றுமே அறிவோம் அதுலயும் நான் நன்கு அறிவேன்.
அது போக மதுரை லே கொலை,கொள்ளைன்னு சொல்லுவாங்களே அதுவும் நடக்கும், but அது மதுரை லே நடந்த அது பெரிய நியூஸ் ஆகிடுது but என்ன பண்ண எல்லாம் அவன் செயல்.
ஆனா சத்தியமா சொல்றேங்க இது வரைக்கும் நான் மதுரையின் மறுபக்கத பார்த்ததே இல்லை
புரியலயா உங்களுக்கு ?
அதாவுது நான் இது வரைக்கும் ஒரு கொலையே கூட என் கண்ணால பார்த்ததே இல்லை.
மதுரையும் தமிழ்நாடு லே இருக்குற ஒரு சாதரணமான சிட்டி தான் இங்க நல்லவங்களும் இருக்காங்க ,கெட்டவங்களும் இருக்காங்க.
இன்னும் சொல்லனும்னா இங்க
பயந்தவர்களும் இருக்கோம், வீரர்கள் மட்டும் இல்லை.(இங்க நான் என்னை தன் குறிப்பிடிகிறேன் )
3.பெண்களை போற்றி பாதுகாக்கும் மதுரை
மதுரைலே தன் பொண்ணுங்களே ரொம்பவும் மதிக்குறோம், இதற்கு உதாரணம் மற்றும் அத்தாட்சி,
நார்த் ஈஸ்ட் பக்கத்தில் இருந்து ( simple சொல்லனும்னா நீங்க பாக்குற எல்லா எடத்துலயும் வேல பாக்குற chineese தான் ) வந் து உழைக்கும் பெண்கள் நம்ம ஊர பத்தி என்ன நேனைகுரங்க நு ஹி ஹிந்து நாளிதழ் பெட்டி எடுத்தது .
இப்போ நம்ம naturals spa லே எடுத்துகோங்க ,
இங்க வந்து வேலை பாக்குறவங்க லே ரெண்டு மூணு பேர் சொன்னது மட்டும் போடுறேன்......................................
Sentei Lalrem from Meghalaya, a beautician working at a salon in the town says that she and her friends are sometimes late from work but have never faced any danger. “Once we went for ice creams at eleven in the night. Except for a few men smoking at a petty shop, the road was empty. They didn’t misbehave. I feel safe in Madurai,” she says.
Shabina Nipatra from Jorhat in Assam says, We are used to wearing modern clothes and this being a conservative town, initially we invited strange looks. But now, after nearly 3 years, I feel people don’t really mind.” She adds, “We are few here and become friends easily. Though we don’t mingle much with the locals, in our respective work places, we come in contact with many and get along well with all,” she says.
நம்பா குமாரசாமிகளுக்காக link தரேன் பொய் பாருங்க
இப்படி பட்ட ஒரு ஊரை எப்படி எல்லாம் மாத்தி காட்டுறங்க ?
4. அரவாணிகளை கூட அரவணைக்கும் மதுரை
நம்ம எல்லாருமே வெறுத்து ஒதுக்கும் கடவுளின் அறுப்புதமான படைப்புகளான திருநங்கைகளை கூட அரவணைக்குற இடம் தான் மதுரை
இதை பற்றி இன்னும் தெரிஞ்சுக்க இங்க போங்க :
5. மதுரை உண்மையில் ஒரு தூங்காநகரம்
எல்லா படத்துலயும் பார்த்தீங்கனா ஹீரோ வந்து மதுரை லே ஒரு தொழிலாளி இல்லலைனா வெட்டிபயல மாதிரி தான் காட்டுவாங்க, ஆனா மதுரைக்கு நிறைய சிறப்பு இருக்குன்னு மறந்து போய்ட்ரங்க.
உண்மையில் மதுரை ஒரு வெகு ஜன நகரம்( cosmopolitain ), இங்க நெறைய மற்றும் வெவ்வேறு மொழிகள் இருக்கு
மதுரையில் பிற மொழி சகோதரர்கள் பற்றிய விஷயங்களை அறிந்து கொள்ள செல்லவும்:
அது மற்றும் இல்லமா மதுரை லே உலக புகழ் பெற்ற தியாகராசர் பொறியியற் கல்லூரி (நான் அங்க தானே படிக்குறேன் அப்புறம் எப்படி சொல்லுவேன் )இருக்கு .
மதுரையின் சிறப்புகள்னு அடுக்கிநோம்னா நெறைய இருக்கு, தமிழ்நாட்டின் முதல் 4k projector theatre (குரு), சர்வதேச விமான நிலையம், மல்லி, பெப்சிக்கு tough fight தரும் போவொண்டோ,
இன்னும் தெளிவா சொல்லனும்னா
corporate என்னும் சனியனிடம் முழுசாக மாட்டிகொள்ளாமல் இருக்கும் ஒரே ஊருநம்ம மதுரை தான் .
இது எல்லாத விட முக்கியம் marrybrown , KFC இருக்கு(இது இருந்த தான் அதா ஒரு ஊராவேமதிக்குரங்க நம்ம பசங்க ).
இப்போவவுது ஒதுகொங்க மதுரையும் பெரிய ஊரு தான்.
மதுரை பற்றிய உண்மைத்தன்மை ஊடகங்கள் மறந்ததா இல்ல மறைக்குதான்னு தெரியலை. 20 வருஷம் எனக்கு இடம் குடுத்ததாலையோ என்னமோ தெரியலை மதுரையை பத்தி சொன்னா வேட்டைக்காரன் விஜய் போல நரம்பு எல்லாம் ஏகிரிடும்,
(நரம்பு தளர்ச்சியான்னு test பண்ணனும்)
மாற்றம் ஒன்று தான் மாறதுனு சூரியா சொல்ற மாதிரி மற்றதை எதிர் பார்த்து நொந்து நூட்லஸ் ஆனவன்
p .s -எப்டி என்ன புலம்ப வெச்ச தகராறு டைரக்டர்கு நன்றி சொல்லிகறேன்
pictures and info courtesy: allaboutmadurai,guna amuthan photography,skycrappercity etc .
be feel free to comment below
0 comments:
Post a Comment